இந்திய அணியில் ஓட்டைகள் இருக்கிறது.. ரோகித் சர்மா ஒரே போடு! ராகுல் டிராவிட் பதில் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: இந்திய அணியில் ஓட்டைகள் இருப்பதாகவும், அதை நிரப்ப வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார் 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் ரோகித் சர்மா.

Recommended Video

    IND vs NZ | Rohit Sharma recalls India debut under Rahul Dravid |Oneindia Tamil

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவிசாஸ்திரி ஓய்வு பெற்றதை அடுத்து புதிதாக அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

    அவர் பேட்டிங் ஆடும் காலகட்டத்தில் கூட கிரிக்கெட்டுக்கு உரிய விதிமுறைகளின்படி ஷாட் ஆடக்கூடியவர். அவரது நடவடிக்கைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இருக்கும்.

    எனவே தான், மிஸ்டர் கிரிக்கெட் என்று அவர் அன்போடு அழைக்கப்படுகிறார்.

     பயிற்சியாளர்

    பயிற்சியாளர்

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றதில் அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பங்களிப்பு அபரிமிதமானது. எனவே தான், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர்மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

     ரோகித் சர்மா பேட்டி

    ரோகித் சர்மா பேட்டி

    பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு, நேற்று முதல் முறையாக ராகுல் டிராவிட் மற்றும் புதிய கேப்டன் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்தனர். ரோஹித் சர்மா தனது பேட்டியின்போது, வீரர்கள் பயமின்றி விளையாட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதுபோன்ற நேரங்களில் சில வீரர்களுக்கு தோல்வி ஏற்படலாம். ஆனால் அதை பற்றி பயப்படாமல் ஒவ்வொரு வீரரும் பயமின்றி ஆடினால் டீமுக்கு நல்லது. அணியில் உள்ள ஓட்டைகளை நிரப்ப வேண்டிய வேலை இருக்கிறது. அதுதான் மிகப் பெரிய சவாலான விஷயம்.

    எங்களுக்கு எது ஓகே

    எங்களுக்கு எது ஓகே

    பிற அணிகள் பின்பற்றும் நடைமுறையை நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்லமுடியாது. எங்களுக்கு எது சிறந்ததாக இருக்குமோ அந்த வழிமுறைப்படி ஆட்ட திறனைக் கொண்டு வருவோம். இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    ராகுல் டிராவிட் பேட்டி

    ராகுல் டிராவிட் பேட்டி

    அப்போது ராகுல் டிராவிட் கூறியதாவது- தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு வீரர்களுடன் சில உரையாடல்களை நிகழ்த்தி உள்ளேன். உலககோப்பையில் அவர்கள் மும்முரமாக இருந்ததால் அவர்களை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. எனவே இனிமேல் கூடுதலாக உரையாட வேண்டியிருக்கும்.

    அனைத்து வகை போட்டிகளும்

    அனைத்து வகை போட்டிகளும்

    எந்த ஒரு வகை கிரிக்கெட் போட்டிக்கும் தனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம்தான். ஐசிசி தொடர்கள் என்றால் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக இந்திய அணியை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது இலக்.கு ஒவ்வொரு வகை போட்டிக்கும் ஒவ்வொரு வகையான வீரர்களை கொண்ட அணியை களமிறங்குவது என்ற யோசனைக்கு நாங்கள் செல்லவில்லை. வீரர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியம் என்பதை கருத்தில் எடுத்துள்ளோம்.

    தனி அணி இல்லை

    தனி அணி இல்லை

    வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் அந்த அளவுக்கு அவர்களுக்கு தேவையான ஓய்வு தரப்பட வேண்டும். அதேநேரம் தனித்தனி வீரர்களைப் கொண்ட தனித்தனி அணிகளை உருவாக்கும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+