இந்தியாவின் மலிவு விலை 'மங்கள்யான்' ...!
டெல்லி: உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா மிகக் குறைந்த செலவில் மங்கள்யான் விண்கலத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது.
இந்தியா இன்று விண்ணில் ஏவிய மங்கள்யான் விண்கலம் ரூ450 கோடியில் உருவானது. அமெரிக்காவின் நாசா செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பிய விண்கலத்தின் தயாரிப்பு தொகையில் ஆறில் ஒரு பங்குதான் இந்த ரூ450 கோடி.

அத்துடன் அமெரிக்கா, ரஷியா அனுப்பிய விண்கலங்களைவிட சிறிய அளவிலான உபகரணத்தையே இந்தியாவின் மங்கள்யான் உள்ளடக்கியிருக்கிறது. நிலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சந்திராயன் விண்கலத்தில் மிக துல்லியமான கருவிகள் பொருத்தப்பட்டது போல் இந்த மங்கள்யானிலும் துல்லியமான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் 2011ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு சீனா விண்கலம் ஒன்றை அனுப்பியது. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. அதற்கு முன்னர் ஜப்பானும் முயற்சித்துப் பார்த்து தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications