இத்தாலி நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இத்தாலி நிறுவனத்துடன் ரூ.3600 கோடி மதிப்பில் விஐபிகளுக்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் போட்டிருந்தது. இதில் 3 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் கொடுக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தைப் பெற அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ.360 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக புகார் வெடித்தது.

இது தொடர்பாக விமானப்படை முன்னாள் தளபதி தியாகி உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

{gallery-feature_1}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+