70 ஆயிரம் படை வீரர்கள்.. ஜெட்கள்.. ட்ரோன்கள்.. லடாக் எல்லையில் குவிக்கும் சீனா.. என்ன நடக்கிறது?
லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் 70 ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்து இருப்பதாகவும் இந்தியாவிற்கு சொந்தமான டெப்சாங் பகுதியில் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும் தி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலை அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்தியா - சீனா இடையிலான எல்லை மோதல் தீவிரம் அடைந்து உள்ளது. லடாக்கில் வாலாட்டி வரும் சீனா இன்னொரு பக்கம் அருணாசலப்பிரதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது.
சமீபத்தில் அருணாசலப்பிரதேச எல்லையில் தவாங் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயன்றது. ஆனால் இதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த எல்லைக்குள் நுழைய முயன்ற சீனாவை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

அருணாசலப்பிரதேசம்
ஆனாலும் தொடர்ந்து அருணாசல பிரதேச எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது. அதேபோல் ட்ரோன் மூலமாக சோதனைகளை செய்து வருகிறது. மேலும் சீனாவின் போர் விமானங்களும் இங்கே குவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கு லடாக் எல்லையில் 70 ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்து இருப்பதாகவும் இந்தியாவிற்கு சொந்தமான டெப்சாங் பகுதியில் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும் தி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலை அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. எல்ஏசி பகுதியில் அதாவது கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா கூடுதல் கட்டுமானங்களை மேற்கொண்டு உள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ள நிலையில்தான் தி டெலிகிராப் ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

என்ன செய்தி
அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், லடாக் எல்லையில் சீனா அதிக அளவு படைகளை குவித்து உள்ளனர். சோதனை டிரோன்களை களமிறக்கி உள்ளது. இரண்டு நாடுகளும் பரஸ்பரம் வெளியேறிய நிலப்பகுதியில் சீனா தனது ட்ரோன்களை பறக்கவிட்டுக்கொண்டு இருக்கிறது. சீனா கிழக்கு லடாக் பகுதிக்கு அருகே 70 ஆயிரம் படைகளை குவித்து உள்ளது. அங்கு தொடர்ந்து கட்டுமானங்களை சீனா மேற்கொண்டு வருகிறது. இங்கே சாலைகள், ஹெலிபேட்கள், ராணுவ கேம்ப்கள் ஆகியவற்றை அமைத்து வருகின்றனர்.

டெப்சாங்
டெப்சாங்கில் இந்தியா உரிமை கொண்டாடி வரும் நிலப்பரப்பில் சீனா இந்த கட்டுமானங்களை மேற்கொண்டு உள்ளது. இந்த பகுதியை கைப்பற்றினால் லடாக்கில் பல்வேறு மலை பகுதிகளை கைப்பற்றுவது எளிதாகும். இதன் காரணமாகவே இங்கு படைகள், போர் விமானங்கள், டிரோன்களை சீனா அதிகம் களமிறக்கி உள்ளதாம். அதேபோல் முன்பு சண்டை நடைபெற்ற கல்வான் பகுதியிலும் சீனா படைகளை குவித்து வருவதாகவும், அங்கே படை நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சீனா
இந்தியாவில் கடந்த 2020 மே மாதத்தில் இருந்து சீனா ஆக்கிரமித்த 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பை அப்படியே கட்டுப்பாட்டில் வைக்கவும், கூடுதல் இடங்களில் ஆக்கிரமிப்பை செய்யவும் முயன்று வருவதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னதாக கல்வான் மோதலுக்கு பின் செய்யப்பட்ட பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் ஏற்கனவே 2020க்கு முன் இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சீனா அதை மீறி, புதிதாக ஆக்கிரமித்த பகுதிகளிலேயே படைகளை வைத்து இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா எப்படி பதில் அளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications