சிக்கலான "ஆபரேஷன்".. லடாக் பேச்சுவார்த்தைக்கு ஹரீந்தர் சிங்கை அனுப்பும் இந்திய ராணுவம்.. யார் இவர்?
லடாக்: இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பாக லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் கலந்து கொள்கிறார்.
Recommended Video
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இரண்டு நாட்டு எல்லை பிரச்சனையை தீர்க்கும் வகையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இரண்டு நாட்டுக்கும் இடையில் கடந்த 40 நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அமைதி பேச்சுவார்த்தை முதல் கட்டமாக நடக்க உள்ளது. லடாக்கில் சுசுல் மோல்டோ பகுதியில் பாங்காங் திசோ அருகே இந்த மீட்டிங் நடக்க உள்ளது.

யார் செல்கிறார்
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பாக லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் கலந்து கொள்கிறார். லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் லடாக்கில் லேவில் இருக்கும் 14வது பாதுகாப்பு படை பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஆவார். நெருப்பு மற்றும் சீற்றம் என்று பொருள்படும் வகையில் இவரின் படைப்பிரிவுக்கு 'Fire and Fury Corps' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கருத்து
இவர் ஏற்கனவே இந்தியா சீனா பிரச்சனை குறித்து பேசியவர்தான். இந்தியாவும் சீனாவையும் 1962க்கு பிறகு எல்லை பிரச்சனையை பேசி தீர்த்து இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. தொடர்ந்து எல்லையில் சிறிய சிறிய மோதல்கள் வருகிறது. இப்படி சண்டைகள் வருவது பெரிய சண்டைக்கு வித்திடும் என்று 2010லேயே லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் குறிப்பிட்டு இருந்தார். இப்போது அவர்தான் இந்த பேச்சுவார்த்தைக்கு செல்கிறார்.

இவரின் படை
இவர் வழி நடத்தும் படை வலிமை வாய்ந்த சக்தி மிகுந்த படையாகும் இது. இந்த படை லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. அதேபோல் சியாச்சின் பகுதிகளிலும் இந்த படைதான் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இந்த படை பிரிவின் லெப்டினன் ஜெனரலாக ஹரீந்தர் சிங் இருக்கிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதம்தான் இந்த படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் பொறுப்பில் ஹரீந்தர் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முக்கிய டாஸ்க்
இதற்கு முன் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார். இவர் இதற்கு முன் ராணுவ புலனாய்வு குழுவின் இயக்குனர், பொது ராணுவ நடவடிக்கைகளின் இயக்குனர் மற்றும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்கள் கட்டுப்பாட்டு இயக்குனர் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவருக்கு மிக முக்கியமான டாஸ்க் கொடுக்கப்பட்டது உள்ளது. இரண்டு நாட்டு அமைதி அவரின் கையில் உள்ளது.

சிக்கலான ஆபரேஷன்
இன்று நடக்கும் ஆபரேஷன் மிகவும் சிக்கலானது என்று கூறுகிறார்கள். லடாக் எல்லையில் சென்று எதிரி நாட்டு வீரர்களுடன் பேசி அமைதியை கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் ஹரீந்தர் சிங் இதை செய்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இன்றைய மீட்டிங் காரணமாக மொத்த இந்தியர்களின் பார்வையும் ஹரீந்தர் சிங் பக்கம் திரும்பி இருக்கிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications