பெங்களூர்: திருநங்கைகள்- ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ‘க்யு ரேடியோ’
பெங்களூர்: ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் மற்றும் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களுக்கு என பிரத்யேகமான வானொலி சேவையை பெங்களூரை சேர்ந்த ‘கியு ரேடியோ' துவக்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த ரேடியோவில் மேற்கண்ட சமுதாயத்தினருக்கான சிறப்பு தகவல்கள், மருத்துவ குறிப்புகள், நேயர் விருப்ப பாடல்கள் ஆகியவை 24 மணி நேரமும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. ரேடியோவாலா.இன் என்ற நிறுவனம் இந்த ஒலிபரப்பை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஒலிபரப்பு சேவை குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் பங்குதாரருமான அனில் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-
2009-ம் ஆண்டு எங்கள் வானொலியின் டெல்லி நிகழ்ச்சியில் இந்த சமுதாயத்தினர் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நான் தொகுத்து வழங்கினேன்.
அன்றிரவு முதல் அவர்கள் மத்தியில் எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஒரு நிகழ்ச்சியிலேயே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் போது, இவர்களுக்கு என தனியாக ஒரு சேனலை தொடங்கினால் என்ன ? என சிந்தித்தேன். அது இப்போதுதான் செயல் வடிவம் பெற்றுள்ளது என்றார்.
பொதுவாக மீடியாக்களாலும் சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். இவர்களையும் முன்னிலைப் படுத்தக்கூடிய பிரதிநிதிகள் தேவை. இவர்களுக்குள் இருக்கும் எண்ணங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும் சாதனம் தேவை. அந்த சாதனமாக இந்த கியு ரேடியோ அமையும் என கருதுவதாக ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications