சரியான நேரத்தில் இந்தியா கொடுத்த அடி! செனாப் நதி நீர் திடீரென நிறுத்தம்.. கதறும் பாகிஸ்தான்
டெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாகச் செல்லும் நீரோட்டத்தை இந்தியா நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்த நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் கடந்த மாதம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். மேலும், பலர் மிக மோசமாகக் காயமடைந்தனர்.

சிந்து ஒப்பந்தம்
இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நிஜமாகவே நடவடிக்கை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாகச் செல்லும் நீரோட்டத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. மேலும் ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையிலும் இதேபோன்ற நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீர் நிறுத்தம்
ஜம்முவில் உள்ள ராம்பனில் உள்ள பாக்லிஹார் மற்றும் வடக்கு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா பகுதிகளில் புனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்த அணைகளில் தான் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரோட்டத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்த அணைகளால் நீரை அதிகளவில் நிறுத்தி வைக்க முடியாது. இருப்பினும், நீர் எப்போது வெளியேறலாம் எப்போது அதை நிறுத்தி வைக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். இது இந்தியாவின் மிக முக்கியமான ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா நடவடிக்கை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்திருந்தது. அதில் ஒன்றாகப் பல ஆண்டுகள் பழமையான ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
பாகிஸ்தான்
உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் உருவாக்கப்பட்டது தான் இந்தச் சிந்து நதி நீர் ஒப்பந்தம்.. 1960 முதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் பயன்பாடு என்பது இந்தச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதிலும் கூட சில விவகாரம் சர்ச்சையாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக பாக்லிஹார் அணை இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நீண்டகாலச் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
இது போன்ற சமயங்களில் பாகிஸ்தான் கடந்த காலங்களில் உலக வங்கியின் நடுவர் மன்றத்தை நாடியுள்ளது. இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், அதிலும் கூட பாகிஸ்தான் உலக வங்கியை நாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications