இந்தியா, பாக், வங்கதேசம் இணைந்த அகண்ட பாரதம் உதயமாகும்- பா.ஜ.க.வின் ராம்மாதவ் சர்ச்சை கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இணைந்த அகண்ட பாரதம் ஒருநாள் உதயமாகும் என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலர் ராம் மாதவ் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தவர் ராம் மாதவ். பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலராக தற்போது இருக்கிறார்.

India, Pakistan, Bangladesh Will Reunite, Says BJP's Ram Madhav

சர்வதேச செய்தி நிறுவனமான அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் ராம் மாதவ் கூறியுள்ளதாவது:

வரலாற்று ரீதியாக ஒரே பகுதியாக இருந்தவை இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான். 60 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரிக்கப்பட்டவை இவை. இவை இணைந்திருப்பதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

எந்த ஒரு நாட்டுடன் யுத்தம் செய்து அதை இணைக்கமாட்டோம். மக்களின் ஒருமித்த கருத்துடனேயே இந்த பகுதிகள் ஒருங்கிணையும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தேசம் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது.

இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.

பிரதமர் மோடி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக திடீரென பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு இருநாடுகளிடையே நல்லுறவை புதுப்பித்துள்ள நிலையில் ராம்மாதவின் கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+