எங்களுக்கும், இந்தியாவுக்குமான உறவு மாமியார், மருமகள் உறவு போன்றது: பாக். தூதரக அதிகாரி
கொல்கத்தா: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மாமியார்-மருமகள் உறவு போன்றது என்று பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி அப்துல் பாசித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பல சிக்கல்கள் உள்ளது. நல்லெண்ணம் இருந்தும் இந்த உறவை வளரவிட நாம் அனுமதிப்பது இல்லை. நாம் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் எல்லையில் ஏதாவது சிறு நிகழ்வு நடந்தாலும் மாமியார், மருமகள் போன்று நாம் பேசுவதை நிறுத்திக் கொள்கிறோம்.
அடுத்த சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். சார்க் விவகாரங்களை விட மோடி பாகிஸ்தான் வருவது பெரிய விஷயம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்களின் சந்திப்பு நல்லபடியாக நடந்தது.
பேச்சுவார்த்தை நடத்த இது உகந்த நேரம் இல்லை என்று இந்தியா நினைத்தால் நாங்கள் காத்திருப்போம் என்றார்.
மாமியார், மருமகள் உறவு என்கிறீர்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு பாசித் கூறுகையில்,
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை சிறுமைப்படுத்த நான் அவ்வாறு கூறவில்லை. ஜாலியாக தான் தெரிவித்தேன். தவறு என்றால் மன்னித்துவிடுங்கள் என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications