இந்தியா - பாகிஸ்தான் திடீர் துப்பாக்கி சண்டை.. காஷ்மீர் எல்லையில் கடும் மோதல்.. பதற்றம்
ஜம்மு காஷ்மீர்: இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் கடந்த மே மாதம் 10ம் தேதி நடந்தது. அதன்பிறகு எல்லையில் அமைதி திரும்பியது. இந்நிலையில் தான் நேற்று திடீரென்று ஜம்மு காஷ்மீர் எல்லையில் நம் நாட்டின் ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே சுப்பாக்கி சண்டை நடந்தது. இருவீரர்களும் மாறிமாறி துப்பாக்கியால் சுட்டு கொண்ட நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் கடந்த மே மாதம் 7ம் தேதி பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இது இருநாடுகள் இடையே போராக மாறியது. துல்லிய தாக்குதல் மூலமாக பாகிஸ்தானை நம் நாட்டு வீரர்கள் பந்தாடினர். இதனால் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து மே மாதம் 10ம் தேதி போர் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இருநாடுகளின் எல்லையில் அமைதி திரும்பியது.
இந்நிலையில் தான் நேற்று திடீரென்று எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா நவ்கம் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே நம் ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சண்டை சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.
இந்த சண்டையில் இருநாடுகளின் வீரர்களும் மாறிமாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக ராணுவம் தரப்பில், ‛‛எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இருநாடுகள் இடையே துப்பாக்கிசண்டை நடந்தது. இந்த சண்டை இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 4 நாட்கள் போர் நடந்தது. அப்போது நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் விமானப்படை தளம், ராணுவம் தளம் அழிக்கப்பட்டது. பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
மாறாக நம் நாட்டின் அதிரடி தாக்குதலால் பயங்கரவாதிகள் தற்போது ஆப்கானிஸ்தான் எல்லைக்கு இடம்பெயர்ந்துள்ளன. அதேவேளையில் சில இடங்களை பாகிஸ்தான் மீண்டும் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து இருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications