For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போற போக்கைப் பார்த்தா சீக்கிரமே சீனாவை முந்திடுவோம் போல இருக்கே!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்திய மக்கள் தொகை வளர்ச்சியடைந்து வருவதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சீனா தான் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. அதற்கு அடுத்தப்படியாக இருப்பது இந்தியா. ஆனால் இந்த நிலை கூடிய விரைவில் மாறி விடலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மக்கள் தொகை வளர்ச்சி பற்றிய ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை.

ஐநா சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில், சீனாவை விட இருமடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தேர்தல் முடிவுகளே வரலை.. அதுக்குள்ள ஜெகன்மோகனை முதல்வராக்கி அழகு பார்க்கும் ஒய்எஸ்ஆர் கட்சியினர்!தேர்தல் முடிவுகளே வரலை.. அதுக்குள்ள ஜெகன்மோகனை முதல்வராக்கி அழகு பார்க்கும் ஒய்எஸ்ஆர் கட்சியினர்!

மேலும் அதிகரிப்பு:

மேலும் அதிகரிப்பு:

1969-ம் ஆண்டு 54 கோடியாக இருந்த இந்தியா நாட்டின் மக்கள் தொகை, கடந்த 1994-ம் ஆண்டில் 94 கோடியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து, தற்போது 2019-ம் ஆண்டில் 136 கோடியை எட்டியுள்ளது.

இருமடங்கு:

இருமடங்கு:

கடந்த 9 ஆண்டுகள் இடைவெளியில், நாட்டின் மக்கள் தொகை, ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இது சீனாவைவிட இரு மடங்கு அதிகமாகும். கடந்த 1994- ம் ஆண்டில் 123 கோடியாக இருந்த சீன மக்கள் தொகை, தற்போது, சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவை ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி சதவிகிதம் மிகவும் குறைவு.

நாம் இருவர் நமக்கு இருவர்:

நாம் இருவர் நமக்கு இருவர்:

இந்தியாவை பொறுத்தவரையில், பெரும்பாலானோர் தற்போது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை. நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாட்டின் படி, ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுகொள்வதில்லை. எனவே பெண்களின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 2.3 ஆக குறைந்துள்ளது.

சராசரி வாழ்நாள்:

சராசரி வாழ்நாள்:

மனிதர்களின் வாழ்நாள் என்பது, கடந்த 1969ம் ஆண்டில் 47 ஆண்டுகளாக இருந்தது இந்தியாவில். இது கடந்த 1969ல் 60ஆக உயர்ந்து, தற்போது அதாவது 2019ல் 69 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. நம் நாட்டில் 10 முதல் 24 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதமாகவும், 14 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதமாகவும் உள்ளது. அதேவேளையில் 15 முதல் 64 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை 67 சதவீதமாக உள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக இருக்கிறது.

English summary
India accounts for over one-sixth of the world’s population in 2019 (1.37 billion out of 7.71 billion) and has grown at an rate (1.2% per year between 2010 and 2019) that is just over the world growth rate (1.2%), according to State of the World Population 2019, the flagship report of the United Nations Population Fund (UNFPA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X