குடியரசு தின விழாவின்போது விமானம் பறக்க தடை விதிக்க முடியாது.. அமெரிக்காவுக்கு இந்தியா மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் போது, அவர் இருக்கும் இடத்தில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது.

வருகிற 26 ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி மிஷலுடன் 25 ம் தேதி டெல்லி வருகிறார்.

ஒபாமா வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

India rejects US request for a no-fly zone over Rajpath for Republic Day

இந்த நிலையில், விழா நடைபெறும் பகுதியில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

குடியரசு தின விழா அணிவகுப்பின்போது வர்த்தக ரீதியிலான விமானங்கள் தான் பறக்க அனுமதிக்கப்பட மாட்டாது. மற்றபடி இந்திய விமானப்படை விமானங்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டு சாகசம் செய்வது வழக்கமாகும். எனவே இந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியாது என்று இந்தியா கூறி விட்டது.

மே்லும், ஒபாமா பயணத்தின்போது மத்திய டெல்லி மற்றும் டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையை 3 நாட்களுக்கு மூடி வைக்கவும் அமெரிக்கத் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. அதையும் மத்திய அரசு ஏற்கவில்லையாம்.

ஒபாமா ஜனவரி 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை இந்தியாவில் இருப்பார். ஜனவரி 26ம் தேதி இ்நதியக் குடியரசு விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+