விவசாயிகளுக்கு உதவ குளிர்பானங்களில் பழச்சாறை கலக்கலாமே: பெப்சி, கோக்கிற்கு மோடி பரிந்துரை
பெங்களூர்: இந்திய விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் பெப்சி மற்றும் கோககோலா உள்ளிட்ட குளர்பானங்களில் பழச்சாறுகளை கலக்க அந்நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தும்கூரில் 110 ஏக்கர் பரப்பில் ரூ. 1,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய உணவுப் பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அப்போது மோடி கூறுகையில்,

கோக்
கோடிக்கணக்கான மக்கள் பெப்சி மற்றும் கோக் வாங்குகிறார்கள். இந்த குளிர்பானங்களில் 5 சதவீதம் பழச்சாற்றை கலக்க முடியுமா என்று பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களை கேட்டுள்ளேன்.

விவசாயிகள்
அவர்களால் மட்டும் குளிர்பானங்களில் பழச்சாற்றை கலக்க முடிந்தால் நம் நாட்டு விவசாயிகளுக்கு நிறைய பணம் கிடைக்கும். நம் விவசாயிகள் பழங்களை தூக்கி எறியத் தேவையில்லை என்றார் மோடி.

பெப்சி
முன்னதாக இந்தியா வந்த பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியிடம் பெப்சியில் உள்ள சர்க்கரை அளவை குறைக்குமாறு மோடி கேட்டுக் கொண்டார்.

பழங்கள்
உலக அளவில் அதிக பழங்கள், காய்கறிகளை விளைவிக்கும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. இங்கு போதிய சேமிப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழங்கள், காய்கறிகளை வீசி எறிகிறார்கள்.

அமெரிக்கா
மோடி நாளை அமெரிக்கா கிளம்ப உள்ள நிலையில் கோக் மற்றும் பெப்சி நிறுவனத்திற்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அமெரிக்காவில் அவர் பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவன தலலைவர்களை சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications