For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகவல் அறியும் உரிமைச்சட்டம்: ரேங்க் பட்டியலில் இந்தியா 2வது இடம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா உட்பட 95 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் செர்பியா முதலாவது இடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். இந்தியாவில்

2005-ல் நடைமுறைக்கு வந்தது

2005-ல் நடைமுறைக்கு வந்தது

2005,ம் ஆண்டில் ஜூன் 21ந் தேதி அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு 2005ம் ஆண்டு அக்டோபர் 12ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

செரிபியா முதல் இடம்

செரிபியா முதல் இடம்

உலக அளவில் இந்த சட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்து சமீபத்தில் ஐரோப்பிய மற்றும் கனடாவைச் சேர்ந்த 2 மனித உரிமை அமைப்புகள் நடத்திய ஆய்வில் செரிபியா 135 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவுக்கு 2வது இடம்

இந்தியாவுக்கு 2வது இடம்

இந்தியா 130 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் உள்ளது.

7 காரணிகள்

7 காரணிகள்

இந்த ஆய்வுக்காக சட்டத்தின் நடைமுறைகள், விதிவிலக்குகள் மற்றும் மறுப்புகள், முறையீடுகள், பொருளா தார தடைகள், பாதுகாப்புகள் மற்றும் ஊக்குவிப்பு, நடவடிக்கைகள், அணுகுமுறைகள் உள்ளிட்ட 7 காரணிகள் கொடுக்கப்படிருந்தன. அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

95 நாடுகளில் ஆய்வு

95 நாடுகளில் ஆய்வு

மொத்தம் 95 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின் தங்கிய வளர்ந்த நாடுகள்

பின் தங்கிய வளர்ந்த நாடுகள்

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை மிகவும் பின் தங்கியதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India’s Right to Information Act has been ranked second in a survey of information laws in 95 countries, in which developed countries, such as the US and UK, ranked far behind developing nations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X