தாவூத் இப்ராகிமின் ரூ 100 கோடி சொத்துகள் முடக்கம்?
மும்பை: தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது அடியாட்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் உள்ள மேலும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க இந்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை வலைவீசிதேடி வருவதையடுத்து, அவனது செயல்பாடுகளை முடக்கும் வகையில், பல்வேறு அதிரடி நவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது, இங்கிலாந்தில் தாவூதுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியல் இந்திய அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் தாவூதுக்கு சொந்தமான 50 சொத்துக்களை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள 10 சொத்துக்கள் மிக முக்கியமானவை. இதனால், தாவூத் சொத்துக்கள் குறித்து இந்திய அதிகாரிகள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, இங்கிலாந்தில் தாவூத் கும்பலின் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே வளைகுடா நாடுகளில் உள்ள அவனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அரசு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications