சீன எல்லையில் படை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.. இந்தியா திட்டவட்டம்
டோக்லாம் எல்லைப் பகுதியில் படைக் குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
டெல்லி: எல்லைப் பகுதியில் படைக் குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியை ஒட்டி சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்திய ராணுவம் அதிரடியாக வீரர்களைக் குவித்தது.

இதில் ஆவேசமடைந்த சீனா, இதற்குப் பதிலடியாக டோக்லாம் பகுதி தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி ஏராளமான ராணுவ வீரர்களை எல்லையில் குவித்தது. இது தொடர்பான பிரச்சனை கடந்த சில வாரங்களாகப் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், சீன அரசு 15 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி முதல் இந்திய ராணுவத்தினர் சீன எல்லைக்குள் புகுந்து சுமார் 100 மீட்டர் தூரத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்றும், எல்லை வீரர்களின் எண்ணிக்கை 40ல் இருந்து 400 ஆக உயர்த்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், புல்டோசரை சீன எல்லைக்குள் இந்தியா நிறுத்தி அத்துமீறியுள்ளது என்றும் உடனடியாக இந்திய படைகளை இங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை குறைப்பது அல்லது திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத வரை இதே நிலையே நீடிக்கும் என்றும் இந்தியா கூறியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications