ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிஸ் உபி முதலிடம்!
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் என்று நாடு முழுவதும் 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் உ.பியை சேர்ந்தவர்களே அதிகம் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
டெல்லி : தேசிய புலனாய்வு அமைப்பால் 2017ம் ஆண்டில் மட்டும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகம் பேர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
டிசம்பர் 20,2017ம் ஆண்டு வரையிலான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை விவரப்படி, நாட்டிலேயே அதிக குற்றசம்பவங்கள் நடக்கும் மாநிலத்தில் உத்திரப்பிரதேசம் முதல் இடம் வகிப்பதாக இந்தியா ஸ்பென்ட் என்ற டேட்டா ஜெர்னலிசம் குறிப்பிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 103 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

இவர்களில் உ.பி மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. உ.பியில் மொத்தம் 17 பேரும், அதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிரா, தெலங்கானாவில் 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் 14 பேர் மற்றும் கர்நாடகாவில் 8 பேரும் ஐஎஸ்ஐஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர மேலும் 14 மாநிலங்களில் இருந்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் டாப் பட்டியலில் உள்ள மாநிலங்களில் தான் 69 சதவீத கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பகீர் தகவலும் சொல்லப்படுகிறது.
இந்தியா ஸ்பென்ட்டிடம் கிடைத்துள்ள தகவல்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக் கூடிய உத்ராகண்ட், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தெலங்கானாவில் அதிக கைதுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்ற கட்டாயப்படுத்துவதாக ஏற்கனவே ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாகின.
நாடு முழுவதும் பல்வேறு தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விதமாக அவர்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஆனால் 2016ல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக 79 பேர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் ஐஎஸ்ஐஸ் உடன் தொடர்பு இருப்பவர்கள் என்று 103 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களும் நாட்டில் இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்களை வெளிச்சம் போட்டு காட்டுபவையாகவே இருக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications