திடீரென சீண்டிய சீனா.. மீண்டும் களமிறங்கிய இந்தியா.. லடாக்கில் பேச்சுவார்த்தை.. என்ன நடக்கும்?
லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை பிரச்சனை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
லடாக்: லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை பிரச்சனை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக லடாக்கில் மீண்டும் சீனாவின் ராணுவம் அத்துமீற முயன்று வருகிறது. பாங்காங் திசோ பகுதியில் சீனாவின் ராணுவம் அத்துமீற முயன்று வருகிறது. இங்குதான் கடந்த மே மாதம் சீனாவின் ராணுவம் அத்துமீறியது.
கடந்த ஜூலை 6ம் தேதி பேச்சுவார்த்தை மூலம் இங்கு நிலைமை சரி செய்யப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையே கட்டுப்பாட்டு பகுதிகள் உருவாக்கப்பட்டு பாங்காங் திசோவில் அமைதி நிலைநாட்டப்பட்டது.

மீண்டும்
ஆனால் தற்போது மீண்டும் லடாக்கில், அதே பாங்காங் திசோ பகுதியில் சீனாவின் படைகள் அத்துமீறி உள்ளது. அதிலும் இரண்டு முறை எல்லையில் அத்துமீற முயன்றுள்ளது. இதனால் தற்போது லடாக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால் எல்லை பிரச்சனை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

எங்கே நடக்கறது
இந்திய - சீன ராணுவத்தின் பிரிகேட் ரேங்க் கொண்ட அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. லடாக்கின் சுஷூல் பகுதியில் பேச்சுவார்த்தை தற்போது நடக்கிறது. இதுவரை 20க்கும் அதிகமான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளை மீறி லடாக்கில் சீனா அத்துமீறியது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை
இதற்கு முன் கமாண்டர் லெவல் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதேபோல் லெப்டினன்ட் ஜெனரல் லெவல் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த லெப்டினன்ட் ஜெனரல் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பாக ஹரீந்தர் சிங் கலந்து கொண்டார். அதன்பின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சார்பாக கடந்த ஜூலை 6ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

மீறி உள்ளது
இதற்கு பின்பே எல்லையில் கொஞ்சம் அமைதி நிலவியது. ஆனால் தற்போது இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை எல்லாம் தற்போது சீனா மீறியுள்ளது. இதையடுத்து தற்போது அடுத்தகட்ட மீட்டிங் நடக்கிறது. இதில் எடுக்கும் முடிவுகளை சீனா மதிக்குமா, பேச்சுவார்த்தைக்கு உண்மையில் சீனா முக்கியத்துவம் கொடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications