மணிப்பூரில் ஆட்சி அமைக்கும் பாஜக; காணாமல் போகும் காங்கிரஸ் - இந்தியா டுடே சொல்வது என்ன?
இம்பால்: மணிப்பூரில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் மீண்டும் பாஜக மிகப்பெரும்பான்மையோடு வெற்றி பெறும் என இந்தியா டுடே கூறியுள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் இன்றோடு முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்தியா டுடே
இந்தியா டுடே நிறுவனம் மணிப்பூர் மாநிலத்துக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக 33-43 இடங்களும், காங்கிரஸ் கட்சி 4-8 இடங்களும், என்.பி.பி- 4-8 இடங்களும், மற்ற கட்சிகள் 06-15 இடங்களையும் பிடிக்கும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

பாஜக
இந்தியா டுடே நிறுவனம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 இடங்களில் பாஜக 33-43 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. அதோடு தனிப்பெரும்பான்மையோடு பாஜக மீண்டும் வரும் என தெரிவித்துள்ளது. இந்த தேர்தலை பாஜக தனித்து சந்தித்தது. அதேநேரத்தில் 17 அயூதம் ஏந்திய இயக்கங்களின் கூட்டமைப்பான குக்கி தேசிய கூட்டமைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

காங்கிரஸ்
பாஜக கடந்த தேர்தலில் பாஜக 60 இடங்களில் 21 இடங்கள் தான் பெற்றிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 28 இடங்களைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என்று எண்ணிய நிலையில் நாகா, மக்கள் கட்சிகளோடு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்து மணிப்பூரில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. இந்த முறை காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 8 இடங்களில் தான் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்த முடிவு தேர்தலில் அப்படியே எதிரொலித்தால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அடியாக அமையும்.

கூட்டணி
மணிப்பூரில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி பாஜக தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மணிப்பூர் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் பெரும்பான்மை கிடைக்கும் என தெரியவந்ததில் பாஜகவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மாநில கட்சிகள்
நாகா கட்சி, தேசிய மக்கள் கட்சி என மணிப்பூரில் மாநில கட்சிகள் வெற்றி, இந்த தேர்தலில் கவனிக்கப்படும். மற்ற கருத்துக்கணிப்புகளின் படி, தோராயமாக பாஜக 35 இடங்களையும், காங்கிரஸ் 32 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிகிறது. இப்படி முடிவுகள் வந்தால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமையும். அது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications