பறக்குது கை கொடி.. சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சி.. பாஜக ஆட்சி கனவு கலைந்தது- இந்தியா டிவி கணிப்பு
ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவின் முழு விவரங்களை பார்க்கலாம்.
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த ஐந்து மாநில தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும் காங்கிரசும் ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்களை கைப்பற்றுவதில் 2 கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி சட்டசபை தேர்தல் என்பதால் இந்த மாநிலங்களில் வெற்றியை உறுதி செய்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக களமாடி வருகின்றன. நாடுமுழுவதும் கவனம் பெற்றுள்ள 5 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சத்தீஷ்கரை பொறுத்தவரை அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி நீடித்து வரும் நிலையில், காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி சத்தீஷ்கரில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், காங்கிரஸ் கட்சியின் கையே சற்று ஓங்கியுள்ளது. சத்தீஷ்கரில் பாஜகவுக்கு 30-40 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46-56 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது. சத்தீஷ்கரில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 46 ஆகும். எனவே, சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று இந்தியா டிவி சி.என்.எக்ஸ் தெரிவித்துள்ளது.
சத்தீஹ்கரில் மொத்த தொகுதிகள் : 90
பெரும்பான்மைக்கு : 46
காங்கிரஸ்: 46-56 தொகுதிகளில் வெற்றிக்கு வாய்ப்பு
பாஜக: 30-40
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications