மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு முடிவுரை எழுதப் போகிறதா பாஜக? அதிரவைக்கும் India TV-CNX சர்வே!
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றும்; முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்கிறது India TV-CNX கருத்து கணிப்பு.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 42 தொகுதிகளிலுமே 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ்- இடதுசாரிகள் ஆகியவை "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனியாகவும் காங்கிரஸ்- இடதுசாரிகள் தனியாகவும் போட்டியிடுகின்றன.

லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் சவாலாகவே இருக்கும் என்பது பொதுவான கருத்து கணிப்பு முடிவுகள். ஆனால் India TV-CNX கருத்து கணிப்பானது, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸைவிட பாஜகதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது. கடந்த 3 தேர்தல்களில் கொடி கட்டிப் பறந்து திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக மாற்றப்பட்ட மேற்கு வங்கத்தில் காவி கொடி பறக்கப் போகிறது என்கிறது India TV-CNX கருத்து கணிப்பு.
India TV- CNX கருத்து கணிப்பு முடிவுகள்:
பாஜக -22
திரிணாமுல் காங்கிரஸ் - 19
காங்கிரஸ் -1
வடக்கு மேற்கு வங்கத்தில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இதில் 6 தொகுதிகளை பாஜக கைப்பற்றுமாம்; திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள்தான் கிடைக்குமாம்.
தென்கிழக்கு மேற்கு வங்கத்தில் 12 தொகுதிகள் உள்ளன. இதில் 7 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ், பாஜக -4 காங்கிரஸ் 1 இடத்தில் ஜெயிக்குமாம்.
கிரேட்டர் கொல்கத்தாவில் மொத்தம் 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளையுமே திரிணாமுல் காங்கிரஸ் அள்ளும் வாய்ப்புள்ளதாம்.
தென் மேற்கு - மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக -12; திரிணாமுல் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெல்லுமாம்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ்- 22
பாஜக- 18
காங்கிரஸ் - 2
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ்- 34
காங்கிரஸ் - 4
சிபிஎம் - 2
பாஜக - 2
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ்- 19
காங்கிரஸ் - 6
சிபிஎம் - 15
பாஜக - 1
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
இடதுசாரிகள் - 35
காங்கிரஸ்- 6
திரிணாமுல் - 1
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications