தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க இலங்கைக்கு மத்திய அரசு கோரிக்கை!
தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: 120 தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதியில் மீன்பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.

தமிழக மீனவர்களை அவ்வப்போது விடுவித்தாலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக படகுகளை மட்டும் விடுவிக்க முடியாது என அடம்பிடித்து வருகிறது இலங்கை அரசு. அண்மையில் இந்திய- இலங்கை மீனவர்கள், அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையும் டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிலையில் இலங்கை வசம் உள்ள 120 தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications