For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள்.. சாதனை படைக்கும் 3 பெண்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விமானப்படையில் விரைவில் 3 பெண் விமானிகள் போர் வி்மானிகளாக பொறுப்பில் அமர்ந்து சாதனை படைக்கவுள்ளனர்.

ஹைதராபாத்தின் ஏர் போர்ஸ் அகாடமியில் தற்போது பயிற்சியில் இருக்கும் இந்த பெண் விமானிகள், விரைவில் இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் என்கின்ற பெருமையைப் பெறப் போகின்றார்கள்.

இந்த அகடாமியில் கிட்டதட்ட 125 பேர் போர் விமானிக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 45 பேரில், மூன்று பெண் விமானிகளும் அடக்கம்.

விமானிகள் அனைவரும் நாளை பயிற்சி முடிந்து வெளியேற உள்ளனர். இதில் தேர்வாகாத வீரர்கள் வருகின்ற ஜூன் 2016 முதல் இரண்டாம் கட்ட பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

தேர்வாகியுள்ள 45 பேரில், 3 பெண் விமானிகளும் போர் விமான படையில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களே இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் என்பதால் வரலாறு படைக்கின்றனர்.

English summary
India will soon get its first female fighter pilots. According to a report, the Indian Air Force has selected three potential women trainees at the Air Force Academy near Hyderabad to become the first female combat pilots of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X