வங்கதேச போரில் ஷேக் ஹசீனாவைக் காப்பாற்றிய இந்திய ராணுவம்.. உதவியாளர் பெருமிதம்
டெல்லி: வங்கதேச விடுதலைப் போரின்போது தற்போதைய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவையும், அவரது குடும்பத்தினரையும் எதிரிகளின் பிடியில் இருந்து இந்திய ராணுவத்தினர்தான் காப்பாற்றினர் என்று ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானிடம் உதவியாளராகப் பணியாற்றியவரான ஹாஜி கோலம் மோர்ஷெட் கூறியுள்ளார்.
கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த விடுதலைப் போரில், இந்தியாவின் உதவியுடன் வங்கதேசம் தனி நாடாக உருவானது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி.

அதன் 44-வது ஆண்டை நினைவுகூறும் நிகழ்ச்சி, டாக்காவில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோர்ஷெட் இவ்வாறு கூறினார்.
வீட்டிலேயே சிறைபிடிப்பு:
அவர் கூறுகையில் "முஜிபுர் ரஹ்மானின் மனைவி பேகம் பாஸிலதுன்னிஸா, மகள் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவரது நான்கு குழந்தைகளை பாகிஸ்தான் படையினர் ஒரு வீட்டில் சிறைப் பிடித்து வைத்திருந்தனர். அப்போது, இந்திய ராணுவ மேஜர் அசோக் தாரா தலைமையிலான இந்திய வீரர்கள் 4 பேருடன் நான் அங்கு சென்றேன்.
கொன்று விடுவதாக மிரட்டல்:
வெறியோடு அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் படையினரிடம் மேஜர் அசோக் தாரா நெருங்கிச் சென்றபோது, ஒரு அடி எடுத்து முன்னால் வைத்தாலும், கொன்று விடுவதாக அவர்களில் ஒருவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான்.
தைரியமாக செயல்பட்ட வீரர்:
நாங்கள் செய்வதறியாது திகைத்த அந்த நேரத்தில், முஜிபுர் ரஹ்மானின் குடும்பத்தினரை அவர்கள் கொலை செய்துவிடுவார்கள் என்றே நினைத்தேன். அப்போது, அசோக் தாரா மிகவும் தைரியமாகச் செயல்பட்டார்.
காப்பாற்றிய இந்திய ராணுவம்:
போரில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து விட்டது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அது உங்களுக்குத் தெரியவில்லை என்று அவர்களிடம் அசோக் தாரா கூறினார். அதையடுத்து, அங்கிருந்து அவர்கள் விலகிச் சென்றதால் முஜிபுர் ரஹ்மானின் குடும்பத்தினரை இந்திய ராணுவத்தினர் பத்திரமாகக் காப்பாற்றினர். இந்தச் சம்பவம், கடந்த 1971 ஆம் ஆண்டு இதே நாளில் நடந்தது என்று தெரிவித்துள்ளார்" ஹாஜி கோலம் மோர்ஷெட்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications