பறக்கும் விமானத்தில் ரிப்போர்ட்டரான ஹர்திக் பாண்ட்யா.. கையில் சிப்ஸை கொடுத்து கிளம்ப சொன்ன 'தல'!
நடுவானில் விமானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களை சக வீரரான ஹர்திக் பாண்ட்யா பேட்டியெடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
டெல்லி: நடுவானில் விமானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களை சக வீரரான ஹர்திக் பாண்ட்யா பேட்டியெடுத்த சுவாரசிய வீடியோ வைரலாகியுள்ளது.
அனைவரும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் அதகள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
இதனால் அனைவரின் கவனமும் இந்திய கிரிக்கெட் அணியின் பக்கம் திரும்பியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான போட்டி
அதாகப்பட்டது, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இந்த போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ளன.

சுவாரசிய வீடியோ
இதற்காக இந்திய அணி வீரர்கள் லண்டன் சென்றுள்ளனர். இந்நிலையில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது நடுவானில் வீரர்கள் இடையே நடந்த சுவாரசிய வீடியோ வெளியாகியுள்ளது.

போரிங் பயணம்
அதாவது வீரர்கள் அனைவரும் விமானத்தில் பயணித்து கொண்டிருந்தனர். விமானத்தில் பயண நேரத்தை கழிப்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு அலுப்பான ஒன்றாகும்.

போரான பாண்ட்யா
வேடிக்கை பார்க்க கூட எதுவும் இல்லாத நடுவானில் அவரவரும் வீடியோ பார்ப்பது பாட்டு கேட்பது என நேரத்தை கடத்திக்கொண்டிருந்தனர். இதனால் சலிப்படைந்த ஹர்திக் பாண்ட்யா எப்படியாவது நேரத்தை கடத்தியாக வேண்டுமே என எண்ணினார்.

ரிப்போர்ட்டரான பாண்ட்யா
இதற்காக நடுவானில் பறக்கும் விமானத்தில் ரிப்போர்ட்டரானார் ஹர்திக் பாண்ட்யா. பாண்ட்யாவும் சாஹலும் தன்னுடன் விமானத்தில் பயணித்த சக வீரர்களை கையில் சிப்ஸை கொடுத்தவாறே பேட்டியெடுக்க ஆரம்பித்தனர்.

பாண்ட்யா, சாஹல்
கேப்டன் விராட் கோஹ்லியிடம் இருந்து பேட்டியை தொடங்கினார் பாண்ட்யா. அனைத்து வீரர்களிடமும் பேட்டிக் கண்டார் அவர். லேப்டாப்பில் மூழ்கியப்படி படம் பார்த்துக்கொண்டிருந்த வீரர்களை தொந்தரவு செய்வதற்காக இந்த பேட்டியை மேற்கொண்டனர் ஹர்திக் பாண்ட்யாவும் சாஹலும்.

சீரியஸாக படம் பார்த்த டோனி
அப்போது இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான டோனியை நெருங்கினர் பாண்ட்யாவும், சாஹலும். ஆனால் டோனியோ படுசீரியஸாக லேப்டாப்பில் படம் பார்த்துக்கொண்டிருந்தார்.

கிளம்பு கிளம்பு..
பேட்டியெடுக்க சென்ற பாண்ட்யாவை நிமிர்ந்து கூட பார்க்காமல் கையில் ஒரு சிப்ஸை கொடுத்து கிளம்பு கிளம்பு என கூறுவதை போல சைகை செய்துவிட்டு சிரித்தப்படியே படத்தில் மூழ்கினார் டோனி.

வைரலான வீடியோ
இந்த வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வைரலான இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications