ஆர்கே நகர் தேர்தலில் குறைவான பணமே பிடிக்க முடிந்தது... புதிய தேர்தல் ஆணையர் ராவத் பேட்டி!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குறைவான பணத்தை பிடிக்க முடிந்ததாக புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது குறைவான பணத்தை பிடிக்க முடிந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்றும் தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது சவாலான விஷயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஜோதியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓ.பி.ராவத் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். ராவத் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நாடு முழுவதும் 38 கோடி வாக்காளர்களின் அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பணியை 100 சதவீதம் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு முறை தேர்தல் நடத்தும் போதும் பணப்பட்டுவாடா என்பது சவாலான விஷயமாக இருக்கிறது. தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலம், வேட்பாளர்கள் விதவிதமான முறைகளில் பணப்பட்டுவாடா பரிசுப் பொருட்களை விநியோகிக்கின்றனர்.
ஆர்கே நகர் தேர்தலின் போது பணப்பட்டுவாடா முற்றிலும் தடுக்கப்பட்டனவா என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஏனெனில் பறக்கும் படை,துணை ராணுவம் பயன்படுத்தப்பட்டு இந்த முறை குறைந்த அளவிலான பணத்தையே பிடிக்க முடிந்தது. பணப்பட்டுவாடாவை தடுக்க வேறு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ அதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்றும் ராவத் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications