தெலுங்கானா-சட்டீஸ்கர் மாநில எல்லையில் 8 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை
ஹைதராபாத்: தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள சுக்மா மாவட்டத்தின் கோட்டிபாடு என்ற காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே எற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 5 பெண்களும் அடங்குவர்.
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில கூட்டு அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு மாநில எல்லையில் உள்ள சுக்மா மாவட்டத்தின் கோட்டிபாடு என்ற காட்டுப்பகுதியில் நேற்று அதிகாலை தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அதிரடிப்படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே எற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், தெலுங்கானாவின் வெங்கடாபுரம் பகுதி மாவோயிஸ்டு செயலாளரான லச்சா என்ற குஞ்சா வீரய்யா உட்பட 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 5 பெண்களும் அடங்குவர்.
சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, ஒரு எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி மற்றும் 3 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிரடிப்படை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications