1993 முதல் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத்!
டெல்லி: நிழல் உலக தாதாவும், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதையும், அந்நாட்டு அரசு 3 பாஸ்போர்ட்டுகள் வழங்கியுள்ளதையும் இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
மும்பையில் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடியதும், அந்நாட்டு ஐ.எஸ்.ஐ. அமைப்பின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இண்டர்போல் உதவியுடன், அவனை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாவூத் இப்ராகிம் இருப்பிடம் தொடர்பாக உள்துறை இணைஅமைச்சர்கள் இருவர் அண்மையில் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள முர்ரீ சாலையில் தாவூத் இப்ராகிம் தங்கி இருப்பதை இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அவனுக்கு பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ள 3 பாஸ்போர்ட்டுகள், அவற்றின் எண்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாவூத் குறித்து இவ்வளவு தெளிவான தகவல்களை இந்தியா கொடுத்தும் கூட பாகிஸ்தான் ஒரு கொட்டாவி கூட விடாமல் கமுக்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications