செல்போன்கள் விற்பனை 20 ஆண்டுகளுக்குப் பின் சரிந்தது...
டெல்லி : சாதாரண இந்திய செல்போன்கள் விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் முதல் முறையாக பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்மார்ட் போன்களை பொதுமக்கள் விரும்புவதால் சாதாரண போன்களுக்கு மவுசு குறைந்துள்ளது.
ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகளின் வரத்து இந்தியாவில் செல்போன் விற்பனையை கடந்த 10 ஆண்டுகளில் சூடுபிடிக்கச் செய்தது.

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டின் 4-வது காலாண்டில் 6 கோடியே 20 லட்சமாக இருந்த செல்போன்கள் விற்பனை 2015 ன் முதல் காலாண்டில் 5 கோடியே 30 லட்சமாக சரிந்திருப்பது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டின் 4-வது காலாண்டை ஒப்பிடும் போது இந்தாண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகம் என்பதும், ஸ்மார்ட் போன்களின் விற்பனையில் அமெரிக்காவை அடுத்த ஆண்டு மிஞ்சும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் செல்போன்களுக்கான உற்பத்தி வரியை 6 லிருந்து 12.5 % ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனால் செல்போன்களின் விலை 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
எனினும் ஸ்மார்ட் போன்கள் மீதான மக்களின் மோகம் அதிகரித்துள்ளது என்பதையே சாதாரண போன்களின் விற்பனை வீழ்ச்சி காட்டுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications