கடகட வண்டி காமாட்சி வண்டி... ரயில்வேக்கு 162 வயசு... ‘ரயில்’ கேக் வெட்டிக் கொண்டாடிய பயணிகள்!
தானே: நாட்டின் முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதன் 162வது ஆண்டு தினத்தைப் பயணிகள், ரயில் வடிவ கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்திய ரயில்வே சேவை துவங்கப்பட்டு 162 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் பயணிகள் ரயில் பம்பாய் நகரில் இருந்து தானே நகருக்கு இயக்கப்பட்டது.
அதனைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 16ம் தேதி, இந்திய ரயில்வேயின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று 162வது ஆண்டு விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.

162வது
இதனை, தானே ரயில் நிலையத்தின் 162வது ஆண்டு தொடக்க விழாவாக நேற்று பயணிகள் மற்றும் அதிகாரிகள் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். தானே ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில்கள், நீண்ட தூர ரயில்கள் மீது ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் மற்றும் பயணிகள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.

பிரதான ரயில் நிலையம்...
மத்திய ரயில்வே வழித்தடத்தில் உள்ள பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக தானே ரயில் நிலையம் திகழ்கிறது. இங்கு தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து போகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவை நடக்கிறது. இது தவிர 60-க்கும் மேற்பட்ட நீண்ட தூர ரயில்கள் தானே ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரியது...
உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே இந்திய ரயில்வேதான் என்பது குறிப்பிடத்தக்கது. பம்பாய்- தானே இடையே விடப்பட்ட முதல் ரயிலானது பம்பாயிலிருந்து கிளம்பி 57 நிமிடத்தில் தானேவைச் சென்றடைந்தது. மொத்த தூரம் 33.9 கிலோமீட்டர் ஆகும். முதல் ரயிலில் 400 பேர் பயணித்தார்கள்.

தினசரி டிக்கெட் கட்டண வசூல் ரூ. 40லட்சம்...
இந்தியாவின் மிக பிசியான ரயில் நிலையங்களில் தானேவும் ஒன்றாகும். இங்கு 11 பிளாட்பாரங்கள் உள்ளன. 24 டிக்கெட் கவுண்டர்கள் உள்ளன. தினசரி 1100 உள்ளூர் ரயில்களம், 55 பிற ரயில்களும் இங்கு வந்து செல்கின்றன.
தினசரி தானே ரயில் நிலையத்தில் வசூலாகும் டிக்கெட் கட்டண வசூல் ரூ. 40 லட்சமாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications