பாகிஸ்தானை இந்தியா வெல்ல வேண்டும்... கர்நாடகாவில் ரசிகர்கள் வழிபாடு
பாகிஸ்தான் அணியை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெல்லவேண்டும் என்று கர்நாடகாவில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
பெங்களூரு: 8 வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வெல்ல கர்நாடகாவில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், 'பி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என சிறப்பு வழிபாடு ரசிகர்களால் நடத்தப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலத்திலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என சிறப்பு யாகத்துடன் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் ஆங்காங்கே சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications