என்னை காப்பாத்துங்க சுஷ்மாஜி: வீடியோ வெளியிட்ட சவுதியில் சிக்கியுள்ள இந்தியர்
டெல்லி: சவுதிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் முதலாளியால் கொடுமைப்படுத்தப்படும் இந்தியர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு வீடியோ மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் குடும்பத்தின் வறுமை காரணமாக சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். சவுதியை அடைந்த அவரை சக்கையாய் பிழிந்து வேலை வாங்குகிறார்களே தவிர அவருக்கு ஊதியம் மட்டும் அளிக்கவில்லை.
மேலும் சாப்பிடக் கூட பணம் அளிக்காமல் வேலை வாங்குகிறார்கள். இந்நிலையில் ஆகாஷ் தனது செல்போனில் தன்னையே வீடியோ எடுத்து தான் படும் துயரங்களை எல்லாம் கூறி இந்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் சேர்த்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
யூடியூப்பில் இருந்த அந்த வீடியோவின் லிங்கை ஒருவர் சுஷ்மாவுக்கு ட்விட்டர் மூலம் அனுப்பி வைத்தார். அதை பார்த்த சுஷ்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Akash- Maine ye video dekh liya hai.Tumari poori madad ki jayegi.Maine Saudi Arab mein apni Embassy ko bol diya hai. https://t.co/NA6lVyW4xD
— Sushma Swaraj (@SushmaSwaraj) December 29, 2015 ஆகாஷ்- உங்களின் வீடியோவை பார்த்தேன். உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வேன். உங்களின் விவகாரம் குறித்து சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications