விஜய் மல்லையா லண்டனில் கைது

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் இன்று கைது செய்யப்பட் டார்.

விஜய் மல்லையா லண்டனில் கைது
Getty Images
விஜய் மல்லையா லண்டனில் கைது

விஜய் மல்லையாவை தாங்கள் கைது செய்துள்ளதை லண்டன் பெருநகர போலீஸ் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக லண்டன் பெருநகர போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகளின் சார்பாக லண்டன் பெருநகர போலீஸின் நீதிமன்ற விசாரணைக்கு நாடு கடத்தும் பிரிவு கைது செய்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் மற்றும் இந்திய வங்கிகளுக்கு 9000 கோடி ரூபாய் செலுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தற்போது விஜய் மல்லையா எந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று தெளிவாக தெரியவில்லை.

இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்படுத்தப்படுவார்.

விவசாய கடன் தள்ளுபடிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் வெப்ப அலை: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

BBC Tamil
English summary
Indebted tycoon Vijay Mallya has been arrested in London, police have said. He was arrested by the Metropolitan Police's extradition unit "on behalf of the Indian authorities in relation to accusations of fraud".
Please Wait while comments are loading...