பாகிஸ்தானின் ஸ்பை.. பஹல்காமுக்கு சென்ற ஜோதி மல்ஹோத்ரா! லட்ச லட்சமாய் கொட்டிய பணம்! சிக்கியது எப்படி?
டெல்லி: யூட்யூபர் போல பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்ஹோத்ரா என்ற இளம் பெண்ணை கைது செய்திருக்கின்றனர். பாகிஸ்தான் உளவாளிகள் மற்றும் உளவு அதிகாரிகளின் பெயரை இந்துக்கள் பெயரில் தனது மொபைல் போனில் பதிவு செய்திருந்ததோடு பாகிஸ்தானுக்கு அவர் சென்று தகவல்களை வழங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவரது சமூக வலைதளங்களை ரகசியமாக கண்காணித்து வந்த பாதுகாப்பு படையினர் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பல்வேறு நபர்களின் சமூக வலைதள கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வருகிறது. யூட்யூப், எக்ஸ், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வந்தவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8,000 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக பாகிஸ்தானுடன் உளவு தகவல்களை பகிர்ந்து கொண்டதாக பிரபல யூட்யூபரான ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்திருக்கின்றனர். பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களை மத்திய அரசு கண்காணித்து வந்த நிலையில் இந்திய ராணுவ தகவல்களை ஜோதி மல்ஹோத்ரா உள்ளிட்ட ஆறு பேர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு இருப்பது தான் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு வீடியோக்களை போட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏஜென்ட் ஒருவர் மூலம் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள இந்துக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என வீடியோ போட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு செல்ல ஏஜென்ட் விசா பெறும்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரியான ரஹீம் என்பவரிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்ற அவருக்கு உளவு நிறுவனங்கள் மற்றும் உளவாளிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பல இடங்களுக்குச் சென்ற அவர் அதனை வீடியோ எடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்கிறார். மேலும் பிரபல சுற்றுலா தளங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பாதுகாப்பு மையங்கள், கட்சிக் கூட்டம் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்து இருக்கிறார்.
அதிர்ச்சி தரும் விதமாக பஹல்காம் பகுதிக்கு கடந்த ஜனவரி மாதம் சென்ற அவர் அதற்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களில் பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற அவர் அங்கு பாகிஸ்தான் உளவாளிகளை சந்தித்து ரகசிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர்களிடம் இதற்கு ஈடாக பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே ஜோதி மல்ஹோத்ராவின் சமூக வலைதள கணக்குகள் டெலிகிராம், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த போது பாகிஸ்தான் உளவு நிறுவனங்களுடன் அவர் நேரடி தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தான் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் பஞ்சாப் ஹரியானா பகுதிகளை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு சொல்லியதாக அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவேந்திர சிங், இலாஹி, குசாலா, யாமின் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications