இந்தியர்களுக்குப் பிடித்த நகரம் சிங்கப்பூர்தானாம்.. மும்பைக்கு 2வது இடம்தான்!
டெல்லி: உலகிலேயே இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நகரம் சிங்கப்பூர்தானாம். மும்பைக்கு 2வது இடம்தான் கிடைத்துள்ளது இந்தியர்களின் இதயங்களில்.
பிசினஸ் செய்வதற்கும், வாழ்வதற்கும் ஏற்றநகரம், பிடித்த நகரம் சிங்கப்பூர் என்பது இந்தியர்களின் கருத்தாகும்.
சிங்கப்பூர், மும்பை தவிர நியூயார்க், லண்டன், அபுதாபி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடத்தில் வருகின்றன.

இப்சோஸ் ஆய்வு
மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனமான இப்சோஸ் எடுத்த ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

3வது விருப்பநகரம் நியூயார்க்
இந்தியர்களின் 3வது விருப்ப நகரமாக நியூயார்க் இடம் பெற்றுள்ளது.

நான்காவது இடத்தில் லண்டன்
இங்கிலாந்து தலைநகர் லண்டனை நான்காவது விருப்ப நகராக இந்தியர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அபுதாபிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் முதலிடம் மும்பைக்குத்தான்
இந்தியாவில் அனைவரும் வசிக்கவும், பிசினஸ் செய்யவும் விரும்பும் முதல் நகராக மும்பை திகழ்கிறது.

வெறும் பிசினஸ் என்றால் மும்பைதான் பர்ஸ்ட்
வெறும் பிசினஸ் மட்டுமே என்ற கேள்விக்கு மும்பைக்கே அதிக வாக்கு விழுந்துள்ளது. அடுத்த இடத்தில் சிங்கப்பூர், அபுதாபி, நியூயார்க், லண்டன், ஹாங்காங், பெய்ஜிங், டோக்கியோ, சிட்னி, பாரிஸ் ஆகியவை வருகின்றன.

வாழ்வதற்கு மட்டும் என்றாலும் மும்பைதான்
அதேபோல வசிப்பதற்கு மட்டும் என்ற கேள்விக்கும் மும்பைக்கே முதலிடம். அடுத்த இடத்தில் சிங்கப்பூர், லண்டன், நியூயார்க், அபுதாபி, பாரிஸ், சிட்னி, லாஸ் ஏஞ்சலெஸ், ஜூரிச், வாஷிங்டன் ஆகியவை வருகின்றன.

24 நாடுகளில்
24 நாடுகளில் 18,417 இந்தியர்களிடம் இந்த ஆய்வு நடத்ப்பட்டதாம்.

வசிக்க, பிசினஸ் செய்ய, சுற்றுலா செல்ல நியூயார்க் பெஸ்ட்
வசிப்பதற்கும், பிசினஸ் செய்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் சிறந்த நகரமாக நியூயார்க்கை தேர்வு செய்துள்ளனர் இந்தியர்கள். அடுத்த இடங்களில் லண்டன், பாரிஸ், அபுதாபி, சிட்னி ஆகியவை வருகின்றன.

மும்பையைத் தவிர வேறு இல்லை
இந்தப் பட்டியலி்ல் மும்பைமட்டுமே இந்திய நகரமாகும். வேறு எந்த இந்திய நகரமும் இதில்இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications