Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்வெளிக்கு பறக்கும் பூச்சிகள்.. ககன்யான் திட்டத்தில் பெரிய ட்விஸ்ட் இருக்கு! என்ன காரணம் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளி குறித்த பல்வேறு ஆய்வுகள் நமது நாட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையே ககன்யான் திட்டத்தில் மனிதர்களுடன் சிறு பூச்சிகளையும் விண்வெளிக்கு அனுப்ப ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனராம். அதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. விண்வெளி துறையில் வல்லரசு நாடுகளே திணறினாலும், இந்தியா தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறது.

space ISRO Gaganyaan

இஸ்ரோ:

ஏற்கனவே சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் திட்டம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அடுத்த கட்டமாக ககன்யான்-1 மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்கள் இப்போது தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். அடுத்தாண்டு தொடக்கத்தில் ககன்யான் திட்டத்தை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஆய்வாளர்கள் திட்டம்:

இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், மும்பையில் உள்ள TIFR அதாவது டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் ஆய்வாளர்கள், ககன்யான் ராக்கெட்டில் பழம் தின்னும் பூச்சிகளை (fruit flies) சேர்த்து அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். விண்வெளிக்குச் செல்லும் போது அது சிறு உயிரினங்களை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கண்டறியவும், விண்வெளியில் அதன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்கொள்ளும் அழுத்தம் குறித்து ஆய்வு செய்யவும் ஆய்வாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதற்காக டிரோசோபிலா மெலனோகாஸ்டர் என்ற வகை ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவை மனிதர்களுக்கு எளிதாக நோயை ஏற்படுத்தும் மரபணுவைக் கொண்டிருப்பதால், இவை விண்வெளியில் எப்படி நடந்து கொள்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது.

என்ன காரணம்:

இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "குறுகிய கால விண்வெளி பயணங்களின் போது பூச்சிகளின் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய இது உதவும். சுமார் ஏழு நாட்கள் மைக்ரோ கிராவிட்டி நிலையில் இருக்கும் போது வளர்சிதை மாற்றம் எந்தளவுக்கு மாறுகிறது என்பதை ஆய்வு செய்ய இது உதவும்.. இதுவரை நடந்த பெரும்பாலான ஆய்வுகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட நாட்கள் இருக்கும்போது என்ன நடக்கும் என்பது குறித்தே இருந்தது. ஆனால், நாங்கள் குறுகிய கால மிஷனில் என்ன நடக்கும் என்பதை ஆய்வு செய்கிறோம்" என்கிறார்கள்.

இதற்காக ஸ்பெஷலாக குப்பிகள் ரெடி செய்யப்பட்டுள்ளன. ககன்யான் சாட்டிலைட்டில் இந்த குப்பிகள் வைக்கப்பட்டு, விண்வெளிக்கு அனுப்பப்படும். அங்கிருந்தபடி ரியல் டைமில் பூச்சிகளின் செயல்பாட்டை ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள். இந்த ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5-60 நாட்கள் வரை இருக்கும் நிலையில், ஒரு வார ஸ்பேஸ் மிஷன் ஆய்வுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

எப்படி ஆய்வு நடக்கும்:

இந்த பூச்சிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்படும். மற்றொன்று பூமியிலேயே வைக்கப்படும். இரண்டின் செயல்பாடு, உடல்நிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதே இதன் ஆய்வாகும். இதில் ஆய்வாளர்கள் SIRT1 மரபணு குறித்தே முதன்மையாக ஆய்வு செய்வார்கள். முதுமை, வளர்சிதை மாற்றம் மற்றும் அழுத்தத்தைக் கையாள்வது ஆகியவற்றில் இந்த மரபணு முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் தெரிய வரும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும். வரும் காலத்தில் நீண்ட தூர விண்வெளி பயணங்களை மேற்கொள்ளச் சர்வதேச விண்வெளி அமைப்புகள் திட்டமிட்டு வரும் சூழலில், அதற்கு இதுபோன்ற ஆய்வுகள் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+