For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் மூலமான இலக்கு ரூ. 7,525 கோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் மூலமாக ரூ7525 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி அரசு கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது. புதிய அரசு தனது முதலாவது ரயில்வே பட்ஜெட்டை கடந்த 8-ந் தேதி தாக்கல் செய்தது.

அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார ஆய்வு அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். இன்று அவர் மோடி அரசின் முதலாவது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Indirect Taxes to Yield Rs.7525 Crore

இந்த பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள், பான்மசலா உள்ளிட்டவை மீது மிகக் கடுமையாக வரிகள் உயர்த்தப்பட்டன. அதே நேரத்தில் காலணிகள் உள்ளிட்டவைகள் மீதான வரி குறைக்கப்பட்டது.

இந்த நேரடி வரிகள் தவிர 2014-15 வது நிதி ஆண்டில் மறைமுகமான வரிகள் மூலமான இலக்கு ரூ 7,525 கோடியாக இருக்கும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

English summary
The Finance Minister Arun Jaitley said that the tax proposals on the indirect taxes side are estimated to yield Rs.7525 crore during 2014-15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X