இந்த காலத்தில் இப்படி ஒரு ஐடி கம்பெனியா.. வாயை பிளக்க வைத்த சூப்பர் அறிவிப்பு
வார்னிங்.. உங்கள் ஷிப்ட் டைம் ஓவர்.. 10 நிமிடங்களில் கணினி ஷட்-டவுன் ஆகும் என இந்தூர் ஐடி கம்பெனியில் உள்ள கணினிகள் சொல்கின்றன.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் சாப்ட் கிரிட் கம்ப்யூட்டர்ஸ் என்ற ஐடி நிறுவனத்தில் ஷிஃப்ட் நேரம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு போகுமாறு கூறி வருகிறது. அவர்களின் கணினிகள். தங்களது ஊழியர்களின் வேலையைப் போல் தனிப்பட்ட வாழ்க்கையும் முக்கியம் என்பதால் இந்த முயற்சியை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளதாம்.
இப்போதெல்லாம் ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் சிலர் எப்போது வீட்டுக்கு அனுப்புவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் ஆட்குறைப்பு நடவடிக்கையை உலகம் முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இப்படியான சூழலில் இந்தூரில் உள்ள ஐடி நிறுவனம் தங்கள் ஊழியர்களை வேலை முடிந்துவிட்டது. வீட்டுக்கு செல்லுங்கள்., உங்கள் கணினி அணைக்கப்படுகிறது என்று கூறுகிறது. என்னங்க சொல்றீங்க, வேலை முடிஞ்சதும் கரெக்டா வீட்டுக்கு போக சொல்ற கம்பெனியெல்லாம் இருக்கா என்கிறீர்களா.. ஆம் இருக்குங்க.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் சாப்ட் கிரிட் கம்ப்யூட்டர்ஸ் என்ற ஐடி நிறுவனத்தில் உள்ள கணினியில், "எச்சரிக்கை!!! உங்கள் ஷிஃப்ட் நேரம் முடிந்துவிட்டது. அலுவலகத்தின் கணினி அடுத்த 10 நிமிடங்களில் ஷட்-டவுன் ஆகும். வீட்டிற்கு செல்லுங்கள்" என ஷிஃப்ட் நேரம் முடிந்த பின்பும் பணியை தொடரும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் ஒரு அலர்ட் மெசேஜ் கொடுத்திடுமாம். இதுபற்றிய புகைப்படம் தான் லிங்கிடுன் தளத்தில் பேசுபொருளாக உள்ளது..
சாப்ட் கிரிட் கம்யூட்டர்ஸ் கணினி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு மகிழ்வான பணிச்சூழலுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக இதனை செய்வதாக அந்நிறுவனத்தின் ஹெச்.ஆர் பிரதிநிதி தன்வி கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள லிங்கிடு இன் பதிவில், "இது ஒரு விளம்பரமோ அல்லது கற்பனையான பதிவோ அல்ல. இதுதான் எங்கள் அலுவலகத்தின் நிதர்சனம்!! SoftGrid கம்பெனியில்
எனது முதலாளி #WorkLifeBalance ஐ ஆதரிக்கிறார். அவர்கள் இப்படியான சிறப்பு நினைவூட்டலை ஊழியர்களுக்கு வைத்துள்ளனர், இது வணிக நேரத்திற்குப் பிறகு எனது டெஸ்க்டாப்பைப் பூட்டி எச்சரிக்கையை வெளியிடுகிறது. எங்கள் அலுவலகத்தில் ஆபிஸ் டைம் முடிந்த பின்னர் வெளியே அழைப்புகள் மற்றும் மெயில்களும் இல்லை !! இது அற்புதம் இல்லையா?

எனவே, நீங்கள் இந்த வகையான கலாச்சாரத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், உங்கள் மனநிலையை மேம்படுத்த இது உதவும் என நினைக்கிறேன்! இது எங்கள் அலுவலகத்தின் நிஜம்!! ஆம், இந்த காலகட்டத்தில் நாங்கள் நெகிழ்வான வேலை நேரம் மற்றும் மகிழ்ச்சியான சூழலை நம்புகிறோம்
" என கூறியுள்ளார். இதை பார்த்து பலரும் இப்படியும் ஒரு கம்பெனியா என்று பாராட்டி வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications