உயர் அதிகாரி மீது இன்போசிஸ் பெண் ஊழியர்கள் பாலியல் புகார்
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்நிறுவன பெண் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸில் பணிபுரியும் சில பெண் ஊழியர்கள் [email protected] என்ற இமெயில் முகவரியில் இருந்து புகார் அனுப்பியுள்ளதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

அந்த இமெயிலில் கூறியிருப்பதாவது,
நாங்கள் சில பெண்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். உயர் அதிகாரி ஒருவர் எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று புகார் அளித்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மீடியாக்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இன்போசிஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
பாலியல் புகார்கள் குறித்து நாங்கள் எப்பொழுதும் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது போன்ற விஷயங்களில் துரித நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரை ஏற்கவில்லை என்பதில் உண்மை இல்லை என்றார்.
முன்னதாக கடந்த 2002ம் ஆண்டில் டைரக்டர் பனீஷ் மூர்த்தியை பாலியல் புகார் தொடர்பாக இன்போசிஸ் பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications