28 நாள்கள்.... 6 ஜோடிகள்... இதுதான் ராம் ரஹீம் குகையின் பிக்பாஸ் விளையாட்டு!
பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீமின் குகையிலும் பிக்பாஸ் விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video

சிர்சா : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் ரஹீமின் குகையில் பிக்பாஸ் விளையாட்டு விளையாடப்பட்டுள்ளதாக அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தின் கணவர் திடுக்கிடும் புகார்களை கூறியுள்ளார்.
தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் தனது ஆசிரமத்துக்கு வந்த 2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் வளர்ப்பு மகள் என கூறப்படும் ஹனிபிரீத்துக்கும் அவருக்கும் தகாத உறவு இருப்பதாக அவரது கணவர் விஷ்வாஸ் குப்தா தெரிவித்திருந்தார்.

ஹனிபிரீத்துக்கு வலை
தேரா சச்சா அமைப்பில் இருந்தபோது தனக்கும், ஹனிபிரீத்துக்கும் திருமணம் செய்து வைத்த ராம் ரஹீம், ஹனியுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், அதை தட்டி கேட்ட தன் மீது வரதட்சிணை புகார் கொடுத்ததாகவும் ஹனியின் கணவர் குப்தா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராம் ரஹீமின் நிழலாக இருந்த ஹனிபிரீத்தை ஹரியாணா போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் பரபரப்பு
இதுகுறித்து ஹனியின் கணவர் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில் என் மனைவி ஹனியை ராம் ரஹீம் சட்டபடி தத்தெடுத்துக் கொள்ளவில்லை. அது எல்லாமே போலி. பிக்பாஸ் விளையாட்டு போல் 6 ஜோடிகளை 28 நாள்கள் ராம் ரஹீம் அவரது குகையில் தங்க வைத்திருந்தார்.

சிறையில் இருந்தாலும் பவர் உண்டு
ராம் ரஹீம் சிறையில் இருந்தாலும் அவருக்கு செல்வாக்கு உண்டு. நான் அவர் பற்றிய உண்மைகளை கூறுவதற்கு என்னை கொல்லவும் செய்வார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பின்னர் நான் உயிருடன் இருப்பேன் என்பதை என்னால் உறுதிபட கூறமுடியாது. ராம் ரஹீமும், ஹனிபிரீத்தும் என்னையும் என் குடும்பத்தினரையும் பல்வேறு தருணங்களில் மிரட்டல் விடுத்தனர்.

கொல்லவும் உத்தரவு
கடந்த 1999-இல் எனக்கும் ஹனிபிரீத்தும் ராம் ரஹீம் தலைமையில் திருமணம் நடைபெற்றது. எனினும் 2009-இல் ஹனியை அவர் தத்தெடுத்துக் கொண்டார். அதன்பின்னர் 2011-இல் என் மீது வரதட்சிணை என்ற பெயரில் பொய் புகார் அளித்தனர். ராம் ரஹீம் என்னை கொல்லவும் உத்தரவிட்டிருக்கிறார். ஆசிரமத்திலிருந்து நான் என் வீட்டுக்கு சென்றபிறகும் கூட எனது நடமாட்டத்தை கண்காணிக்க 7 பேர் கொண்ட கும்பல் என்னை பின்தொடர்கின்றனர்.

டைரியில் குறிப்பு
அதுகுறித்த குறிப்புகளை டைரியில் குறித்தனர். இது குறித்து நான் போலீஸில் புகார் அளித்தேன். அதன் பேரில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். என்னை பற்றிய குறிப்புகள் அவர்கள் வைத்திருந்த டைரியில் இருந்ததை போலீஸாரே கண்டுள்ளனர். ராம் ரஹீமால் நாங்கள் ஏராளமான துன்பங்களை அடைந்துவிட்டோம் என்று கூறிய குப்தா அழுதபடியே செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications