போலீஸ் ஸ்டேஷனுக்குள் பெண் கான்ஸ்டபிளை பலாத்காரம் செய்ய முயன்ற இன்ஸ்பெக்டர்!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், பெண் கான்ஸ்டபிளை பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்திலுள்ளது, ககட்பூர். இந்த ஊர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக (பொறுப்பு) பணியில் இருந்தவர் ஸ்ரீகாந்த் பாரிக் (38). இவர் மீது கடந்த சனிக்கிழமை பெண் கான்ஸ்டபிள் ஒருவர் புகார் அளித்தார்.

அந்த புகாரில், "கடந்த 6ம்தேதி நள்ளிரவு நேரத்தில் பணியில் இருந்த என்னை, இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த், அவரது அறைக்கு அழைத்தார். நான் அங்கு சென்றபோது, என்னை மானபங்கம் செய்ய முற்பட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, இந்த விவகாரத்தை வெளியில் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக சுபாஷ் சந்திர மொகந்தி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, தான் ஒரு நிரபராதி என்றும், தன்மீது கான்ஸ்டபிள் வீணாக பழிபோடுவதாகவும் இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால், ஆதாரங்கள், இன்ஸ்பெக்டருக்கு எதிராக உள்ளன" என்றார்.
சம்பவம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரும், பெண் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் அறைக்குள் போனதாக சாட்சியம் தெரிவித்துள்ளார். ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பலாத்கார முயற்சி மட்டுமின்றி, புகார் கொடுத்த பெண் கான்ஸ்டபிளின் ஜாதியை அடிப்படையாக வைத்து, ஸ்ரீகாந்த் பாரிக்கிற்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த்துக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளது உள்ளூர் நீதிமன்றம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications