ஷீனா கொலை வழக்கில் புதிய திருப்பம்: அந்தரங்க போட்டோக்கள் சிக்கின
மும்பை: ஷீனா போரா தனது தாய் இந்திராணி முகர்ஜிக்கு நன்கு பழக்கமான ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்து அவரது உடலை தீ வைத்து எரித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஷீனா
ஷீனா கொலை செய்யப்பட்டபோது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்ததாக முன்பு கூறப்பட்டது. அந்த கர்ப்பத்திற்கு அவரது காதலர் ராகுல் அல்ல மாறாக இந்திராணிக்கு நெருக்கமான ஒருவர் தான் காரணம் என்று செய்திகள் வெளியாகின.

புகைப்படங்கள்
ஷீனா தனது தாய்க்கு நெருக்கமான ஒருவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் வாட்ஸ்ஆப் மூலம் அந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது.

தாய்லாந்து
ஷீனாவும் அந்த நபரும் இந்தியாவில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஷீனா தாய்லாந்து சென்று அந்த நபரை சந்தித்து அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதாகவும் அதன் காரணமாக கர்ப்பமானதாகவும் முன்பு கூறப்பட்டது.

ஆன்லைன்
ஷீனாவும், அந்த நபரும் ஆன்லைன் மூலம் சாட் செய்துள்ளனர். நேரில் சந்தித்து நெருக்கத்தை வளர்த்துக் கொண்டது பற்றி அறிந்த இந்திராணி அவர்களை கண்டித்துள்ளாராம். ஷீனாவின் சகோதரர் மிகைலும் போலீசாரிடம் சில புகைப்படங்களை அளித்துள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் தெளிவு பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications