ஐபிஎல் பைனல்: மழையால் தாமதம்.. 15 ஓவர்களாக குறைப்பு.. சிஎஸ்கேவுக்கு டார்கெட்டும் குறைக்கப்பட்டது
அகமதாபாத்: 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில், மீண்டும் மழை பெய்தது. இதனால், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்க உள்ளது. ஓவர்கள் 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டனஸ் அணியும் மோதி வருகின்றன. முன்னதாக இந்த போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவக்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குஜராத் அணியின் துவக்க வீரர்கள் சுப்மான் கில்லும், சஹாவும் அபாரமாக ஆடினார்கள். அதேவேளையில் சென்னை அணியின் ஃபீல்டிங்கும் படு மோசமாக இருந்தது.
சாய்சுதர்சன் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. குஜராத் அணி சென்னைக்கு 215 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி வெறும் 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், போட்டி நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மழை விட்டதால் மைதானத்தை ஆய்வு செய்த கள நடுவர்கள் போட்டியை தொடங்க முடிவு செய்தனர்.
இதன்படி 10.45 மணியளவில் மைதானத்தை ஆய்வு செய்தனர். ஆனால் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் மீண்டும் 11.30 மணிக்கு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. 11.30 மணிக்கு ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கும் என்று அறிவித்தனர். அதேபோல், 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. வெற்றி இலக்கும் 171 ஆக குறைந்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications