For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை சந்திக்க விரும்பும் மணிப்பூர் இரோம் ஷர்மிளா

By Mathi
Google Oneindia Tamil News

Irom Sharmila to Meet Modi
இம்பால்: நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடியை மணிப்பூர் ஆயுத படை சிறப்பு சட்டத்துக்கு எதிராக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மனித உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் ஆயுதபடை சிறப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இரோம் ஷர்மிளாவின் கோரிக்கை. இதற்காக தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டங்களை இரோம் ஷர்மிளா முன்னெடுத்து வருகிறார்.

இதனிடையே வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இரோம் ஷர்மிளா வரும் 27-ந் தேதி டெல்லி வருகிறார். அப்போது தாம் நரேந்திர மோடியை சந்திக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஆயுதப்படையினருக்கான சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாக இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.

English summary
Hunger striker from Manipur Irom Sharmila said today that she will meet Prime Minister-Elect Narendra Modi when she goes to New Delhi on May 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X