முதலில் நேபாள பூகம்பம்.. அடுத்து திடீரென மாயமான ஏரி.. சிக்கிம் வெள்ளத்திற்கு என்ன காரணம்! பகீர்
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் நேற்று அதிகாலையில் திடீரென மிகப் பெரியளவில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இதற்கும் நேபாள நிலநடுக்கத்திற்கும் இடையே தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களாகவே இயற்கை பேரிடர்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்தே வருகிறது. வரலாறு காணாத வெயில், திடீரென கொட்டும் மழை என இயற்கை பேரிடர்கள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அப்படிதான் சிக்கிம் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. மேக வெடிப்பு காரணமாகக் குறுகிய நேரத்தில் அதி தீவிர கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சிக்கிம் வெள்ளம்: இதனால் சிக்கிம் & மேற்கு வங்கம் வழியாக வங்கதேசம் செல்லும் தீஸ்தா நதியிலும் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்தங் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தீஸ்தா நதியின் நீர்மட்டம் நேற்று அதிகாலை திடீரென உயர்ந்தது. அதிகாலையில் சுமார் 20 அடி வரை நீர்மட்டம் உயர்ந்த நிலையில், அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் லச்சன் பள்ளத்தாக்கு, தீஸ்தா நதி அருகே உள்ள பகுதிகள், சிக்கிம் - மேற்கு வங்க நெடுஞ்சாலைகள் எனப் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும், அங்கே இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தால் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 ராணுவ வீரர்கள் உட்பட 100+ பேர் மாயமாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரம் என அஞ்சப்படுகிறது. இந்த வெள்ளத்தால் சிக்கிம் தலைநகர் காங்டாக் அருகே 30 கிமீ தொலைவில் உள்ள இந்திரேனி எஃகுப் பாலம் முற்றிலுமாக தீஸ்தா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
திடீர் வெள்ளம்: திடீரென கொட்டிய கனமழையால் சிக்கிமில் நேற்று புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வெள்ளம் ஆரம்பித்தது. இந்த நேரத்தில் சங்தங் அணையில் இருந்தும் நீர் திறந்துவிடப்பட்டதால் நிலைமை மோசமானது. 20 அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையில், தீஸ்தா நிதி படுகையில் அமைந்துள்ள டிக்சு, சிங்டம் மற்றும் ரங்போ உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 10 உட்பட சிக்கிம் மாநிலத்தின் முக்கிய பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த மேக வெடிப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தான் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த வலுவான நிலநடுக்கம் ரிக்டரில் 6.2ஆகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் மேக வெடிப்பு பேரழிவை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மேக வெடிப்பால் சிக்கிமின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான சுங்தாங் அணையில் உடைப்பு ஏற்பட்டது. இது 1,200 மெகாவாட் உற்பத்தி செய்யும் தீஸ்தா நீர் மின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மாயம்: ஹைதராபாத்தைச் சேர்ந்த நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் வெளியிட்ட புதிய சாட்டிலைட் படங்களில் தெற்கு லோனாக் ஏரியில் திடீரென 100+ ஹெக்டேர் மாயமாகியுள்ளது. அதாவது இந்த ஏரியின் அளவு 162.7 ஹெக்டேர் பரப்பளவு ஆகும். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தேதி இதன் அளவு 167.4 ஹெக்டேராக அதிகரித்து இருந்த நிலையில், திடீரென அது 60.3 ஹெக்டேராக குறைந்தது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
நிலநடுக்கத்திற்குத் தொடர்பு: இந்தச் சூழலில் தான் திடீரென சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் சிக்கிம் வெள்ளத்திற்கும் காரணம் இருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த லோனாக் ஏரி ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 168 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த ஏரியின் பரப்பளவு இப்போது திடீரென 60 ஹெக்டேராக குறைந்துள்ளது. அங்கே இருந்த 100 ஹெக்டர் நீர் வெளியேறி இருக்கும் நிலையில், இது தொடர்பாகவும் ஆய்வு செய்து வருவதாக மத்திய நீர் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications