நேபாளத்தை கவிழ்த்த "CIA".. சீனாவுடன் நெருக்கமானதால் ஆட்சி கவிழ்ப்பு.. அப்போ இந்தியா? அதிருதே
காத்மண்டு: நேபாளத்தில் நடந்து வரும் இளைஞர்கள் போராட்டம், பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் இந்தியா பயணத்திற்கு முன்னதாகவும், அவர் சீனாவிலிருந்து திரும்பிய பின்னரும் ஏற்பட்டுள்ளன. இதில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டம் நடக்கும் "டைமிங்" பல கேள்விகளை.. விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் களமாக மாறியுள்ளது. நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, முன்னாள் துணைப் பிரதமர் ரபி லாமிச்சானே நக்கு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

'ஜென் Z' போராட்டம் என்ற பெயரில் இந்த புரட்சி போராட்டம் நடந்து வருகிறது. காத்மாண்டு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் 'ஜென் Z' இளைஞர்கள் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடினர். இந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமூக ஊடகத் தடையை ஓலி ரத்து செய்த ஒரு நாள் கழித்து, இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன. 'ஜெனரேஷன் இசட்' போராட்டக்காரர்கள் அந்த நாட்டு அரசியல் தலைவர்களுக்கு எதிராக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நேபாளம் போராட்டம்
இளைஞர்களின் இந்தப் போராட்டங்கள் தன்னிச்சையானவை போலத் தோன்றினாலும், சீனா-அமெரிக்கா இடையிலான அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில் இந்த போராட்டம் வெடித்து இருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தலைமுறை Z இளைஞர்கள் முன்னெடுத்த இந்த மாபெரும் போராட்டங்களுக்குக் காரணமான கோபம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனால், இந்தப் போராட்டங்கள் வெடித்த நேரம்தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதமர் கே.பி. சர்மா ஒலியை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இந்தப் போராட்டங்கள், தற்போது இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன. சீனாவுக்குச் சென்று திரும்பிய ஒலி, செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இந்தியாவிற்கு செல்லும் முன் ஆட்சி கவிழ்ப்பு
இளைஞர்கள் மற்றும் சீருடை அணிந்த மாணவர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதியதில் திங்களன்று நடந்த போராட்டங்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். காத்மாண்டு உட்பட நேபாளத்தின் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒலி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்குச் செல்ல இருந்தார். முன்னதாக, இந்திய வெளியுறவுச் செயலாளர் நேபாளத்திற்கு வந்திருந்தார். ஒலி உடன் தனிப்பட்ட சந்திப்பும் நடத்தினார். மேலும், ஒலி தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்று சீனாவில் இருந்து திரும்பினார். இப்படிப்பட்ட நேரத்தில் ஆட்சி கவிழ்ந்து இருப்பதால் இதற்கு பின் அமெரிக்கா இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
நேபாளத்திற்கு பின் அமெரிக்கா
நேபாளம் இந்தியாவின் முக்கியமான அண்டை நாடு, கடந்த ஓராண்டில் அரசியல் கொந்தளிப்பைக் காணும் இரண்டாவது நாடு இது. வங்கதேசத்தில் 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டம், ஆட்சி கவிழ்ப்பு இயக்கமாக மாறியது. ஹசீனா இந்திய ஆதரவுத் தலைவர் எனக் கருதப்பட்டார். வங்கதேசத்தைப் போலவே நேபாளமும் பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் அரசியல் செல்வாக்கிற்கான போட்டிக்கு உட்பட்டுள்ளது.
ஒலியின் தலைமையின் கீழ், நேபாளம் 2024 டிசம்பரில் சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் சேர்வதற்கான கட்டமைப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் ஒலியின் ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேபாளத்தின் பிரதமரான ஒலி அடிப்படியில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர். இவர் தீவிர சீனா ஆதரவாளராகக் கருதப்படுகிறார். நேபாளப் பிரதமர்கள் பாரம்பரியமாக முதலில் இந்தியாவுக்குச் செல்வது வழக்கம். ஆனால், ஒலி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீனாவைத் தேர்ந்தெடுத்தது, பெய்ஜிங்கின் பக்கம் அவர் சாய்ந்ததைக் காட்டுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் அமெரிக்காவின் சிஐஏ அங்கே கை வைத்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications