அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்களை தாக்க திட்டம்: சென்னையில் சிக்கிய ஐஎஸ்ஐ ஏஜென்ட் வாக்குமூலம்
டெல்லி: சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள அமெரிக்க, இஸ்ரேஸ் தூதரகங்களை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக சென்னையில் பிடிப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளான்.
சென்னை மண்ணடியில் சமீபத்தில் ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி பிடிப்பட்டான். இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேனை, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தமிழகத்துக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ரூ.2.5 லட்சம் கள்ள நோட்டுகள்...
அவன் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் அவனது கூட்டாளிகள் சிவபாலன், முகமத சலிம் ஆகியோர் பிடிபட்டனர். இவர்கள் இருவரும் சென்னையில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விட்டதும் தெரியவந்தது. அவர்களது வீடுகளில் சோதனையிட்டு ரூ.2.5 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஜாகீர் உசேனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

சென்னை அமெரிக்க தூதரகம், பெங்களூர் இஸ்ரேல் தூதரகம்...
ஜாகீர் உசேனை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐதான் சென்னைக்கு அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் தகர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்கான உளவு வேலையை செய்வதற்காக ஜாகீர் உசேன் சென்னை வந்தான்.

மாலத்தீவில் இருந்து வந்து தாக்க திட்டம்...
இவ்விரு பகுதிகளிலும் உள்ள தூதரகங்களை வேவு பார்த்த ஜாகீர் உசேன், அந்த கட்டிடங்களையும், அவ்வழியே செல்லும் சாலை அமைப்புகளையும் போட்டோக்கள் எடுத்து அவற்றை இணைய தளம் மூலம் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளான். இதற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டியுள்ளனர். தாக்குதலை திட்டமிடுவதற்காக மாலத்தீவில் இருக்கும் மேலும் 2 பேரை சென்னைக்கு அனுப்ப ஐஎஸ்ஐ உளவு அமைப்பு முடிவு செய்திருந்தது.

ரகசிய இடம்...
அவர்களுக்கான பயண ஆவணங்களை தயாரிக்கும் பணியும், அவர்கள் ரகசியமாக மறைந்து வாழ்வதற்கான இடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் ஜாகீர் உசேனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஜாகீர் உசேன் பிடிப்பட்டதால் பாகிஸ்தான் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள வெளி நாட்டு தூதரகங்களை தகர்க்க ஐஎஸ்ஐ அமைப்பு சதி செய்ததாக கூறப்படும் குற்றச் சாட்டை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகம்மது தவுத் எடிஷாம் மறுத்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications