ஏழை இந்திய இளைஞர்களை தீவிரவாத பாதைக்கு இழுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்
மும்பை: தமிழ்நாடு, கேரளம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏழை இளைஞர்களை குறிவைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தீவிரவாதப் பாதைக்கு இழுத்து செல்கின்றனர்.
இந்தியாவில் செயல்படும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு இதற்கு உதவி வருகிறது. குறிப்பாக வறுமையில் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்தும், குடும்பத்துக்கு அதிக பணம் அளிப்பதாக கூறியும் தீவிரவாதிகளாக மாற்றுகின்றனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதாகக் கூறி அந்நாடுகளில் அரசுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள்.
இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈராக்கில் தீவிரவாதிகளுடன் இணைந் துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதில் ஈடுபட்டுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர்.

இளைஞர்கள் தலைமறைவு
தமிழகம், காஷ்மீரில் இருந்து ஈராக் சென்ற சில இளைஞர்கள் அங்கு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற புனிதப் போரில் ஈடுபடப்போவதாக குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். எனவே அந்த இளைஞர்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தீவிரவாதிகள் அழைப்பு
தங்களுடன் இணையுமாறு இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இணைய தளத்தில் வீடியோவையும் வெளி யிட்டுள்ளனர்.

தமிழக இளைஞர்
தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான டி-சர்ட் அணிந்த நபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாளி இளைஞர் ஹாஜி பக்ரூதீன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர சிரியா சென்றதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் அவர் கடலூரில் உள்ள தனது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ளவில்லை.

இந்தியாவில் தீவிரவாத அமைப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இந்தியாவில் பரவினால், அது நாட்டில் மோசமான தீவிரவாத செயல்களில் ஈடுபடும். எனவே இதனை தொடக்கத்திலேயே அழித்துவிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தீவிர விசாரணை
ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளிடமும் அவர்களது வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications