ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோளை ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ
ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், ரஷ்யாவின் விண்வெளி சாதனையொன்று முறியடிக்கப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா: ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைபடைத்துள்ளது.
பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் ஏழு நாடுகளை சேர்ந்த, 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன.

ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், ரஷ்யாவின் விண்வெளி சாதனையொன்று முறியடிக்கப்பட்டது.
2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான் சாதனையாக கருதப்படுகிறது.
இஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி யதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தியது இஸ்ரோ வரலாற்றில் இது முதல்முறை.












Click it and Unblock the Notifications