104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்.. இஸ்ரோ உலக சாதனை
ஸ்ரீஹரிகோட்டா: 104 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன்மூலம் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 714 கிலோ எடை கொண்ட கார்ட்டோ சாட்-2 செயற்கைகோள் மற்றும் 664 கிலோ எடை கொண்ட 103 செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

320 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் வெளிநாடுகளைசேர்ந்த 101 நானோ வகை செயற்கைகோள்களும், நமது நாட்டை சேர்ந்த 2 நானோ வகை செயற்கைகோள்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் 37 செயற்கைகோள்களை ரஷ்யா ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications